புதுடெல்லி, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ஏர் மார்ஷல் தேஜ்பால் சிங் இன்று இந்திய விமானப் படையின் புதிய துணை தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். வீரர்களுக்கு அஞ்சலி ஏர் மார்ஷல் தேஜ்பால் சிங் இன்று விமானப் படைத் துணை தளபதியாக பொறுப்பேற்றார். இந்நிகழ்வின்போது, அவர் தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, தேச சேவைக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அனுபவம் 1990 ஜூன் 16 அன்று போர் விமானியாகப் பணியில் சேர்ந்த இந்த ஏர் மார்ஷலுக்கு, 3500 மணி நேரத்திற்கும் மேலான விமான பயண அனுபவம் உள்ளது. இவர் 'கேட் ஏ' தகுதி பெற்ற விமானப் பயிற்றுநர் ஆவார். அவர் விமானப் படையில் முக்கிய செயல்பாட்டு, கட்டளை, பணியாளர் பதவிகளை வகித்துள்ளார். வாயு சேனா பதக்கம் அவரது சிறப்பான சேவையை பாராட்டி, அவருக்கு ஜனவரி 2011-ல் வாயு சேனா பதக்கமும், ஜனவரி 2021-ல் அதி விசிஷ்ட சேவா பதக்கமும் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. நாட்டிற்கு 39 ஆண்டுகள் பெருமைமிக்க, சிறப்பான சேவையாற்றி, 31 ஜூலை 26 அன்று ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பார்திக்கு பதிலாக, ஏர் மார்ஷல் தேஜ்பால் சிங் விமானப் படை துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/tejpal-singh-takes-over-as-indian-air-force-deputy-chief




