டோக்கியோ ஆசிய விளையாட்டு ஆடவர் பேட்மிண்டன் குழு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் பேட்மிண்டன் குழு போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிராக விளையாடிய இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. முதலில், அய்மன் இபின் ஜாமனை 21-4, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லக்சயா சென் வெற்றி பெற்றார். நல்ல தொடக்கம் இந்தியாவுக்கு நல்ல தொடக்கமும் ஏற்படுத்தி கொடுத்த நிலையில், அடுத்த ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி தன் பங்கிற்கு கவுரப் சிங்காவை 21-4, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதனால், 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வெற்றி தேவையாக இருந்த நிலையில், கிதம்பி ஸ்ரீகாந்த் அதிரடியாக விளையாடினார். அவர் அல் அமீன் ஜுமாரை 21-15, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். காலிறுதிக்கு தகுதி இதனால், இந்திய பேட்மிண்டன் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த அதிரடி வெற்றியால் இந்திய அணி இரட்டையர் ஆட்டங்களில் விளையாட வேண்டிய தேவை ஏற்படவில்லை. இதனால், நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த சுற்றில் ஜப்பானை எதிர்த்து இந்தியா விளையாடும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-india-win-mens-badminton-team-event




