திருநெல்வேலி, நெல்லை டவுணைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். பாலியல் குற்றவாளி திருநெல்வேலி டவுண், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மைதீன்கான் மகன் செய்யது பீர்முகமது (வயது 30). இவர் குழந்தையை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி, அதன்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதில் பாலியல் தாக்குதல் குறித்த பீதியையும், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த “பாலியல் குற்றவாளி” ஆவார். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது இந்த நிலையில் மேற்சொன்ன வாலிபர் திருநெல்வேலி டவுண் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று (10.9.2026) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/sex-offender-arrested-under-the-gangster-prevention-act-in-nellai




