வாரணாசி நாட்டின் வருங்காலத்திற்கான அடித்தளம் கிராமங்களில் இருந்து தொடங்கும் என உத்தர பிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் பேசியுள்ளார். உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் 9-வது தேசிய ஊட்டச்சத்து மாதத்திற்கான நிகழ்ச்சியை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது, குஜராத் முதல்-மந்திரியாக மோடி பதவி வகித்தபோது, 2001-ம் ஆண்டு தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டம் ஒன்றை முன்வைத்து பேசினார். இதன்பின்னர், 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி, நாட்டின் வருங்காலத்திற்கான அடித்தளம் வலுப்படுவதற்கான திட்ட நடவடிக்கைக்கான தொடக்கப்பணிகளை மேற்கொண்டார். 2001-ம் ஆண்டில், பிரதமர் மோடியால் முன் வைக்கப்பட்ட தொலைநோக்கு திட்டம் இன்று நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். வளர்ச்சியடைந்த இந்தியா தொடர்ந்து அவர் பேசும்போது, நாட்டின் வருங்காலத்திற்கான அடித்தளம் கிராமங்களில் தொடங்கும் என கூறிய அவர், ஒரு சுயசார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கு, அங்கன்வாடி மையங்களும், அடிப்படை கல்வி கவுன்சில் பள்ளிகளும் முதன்மை மையங்களாக இருக்கும் என்று பேசினார். 2017-ம் ஆண்டுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில், அங்கன்வாடி மையங்கள் சேதமடைந்து இருந்தன. குடிநீர், கழிவறை வசதிகள் பற்றாக்குறையாக இருந்ததுடன், சூடாக சமைக்கப்பட்ட உணவு இல்லாமலும் இருந்தன. அங்கன்வாடி மைய தொழிலாளர்கள் தங்களுடைய ஊதியம் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர். ஆனால், கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன என்று பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/foundation-for-the-country-s-future-begins-from-villages-up-chief-minister-adityanath




