Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சையின்போது ஒரே கருவி பலருக்கும் பயன்படுத்தப்படுவதால், ஹெச்ஐவி (HIV) அல்லது பிற நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்பிருக்கிறதா. இது குறித்து எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பல் மருத்துவர் கிருப்நாத் பல் மருத்துவர் கிருப்நாத் பல் மருத்துவ சிகிச்சையின்போது தொற்றுகள் பரவுமோ என்ற பயம் பலருக்கும் இயல்பாக எழுவதுதான். இருப்பினும், முறையாகப் பராமரிக்கப்படும் நவீன பல் மருத்துவமனைகளில் எந்தவொரு தீவிரமான நோய்த்தொற்றும் பரவ சாத்தியமே இல்லை. தற்போது பல் மருத்துவமனைகளில், ஒவ்வொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்த பிறகும் கருவிகள் அனைத்தும் சர்வதேச தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி முழுமையாகச் சுத்தம் செய்து, ஆட்டோக்ளேவ் (Autoclave) மூலம் கிருமிநீக்கம் (Sterilization) செய்யப்படுகின்றன. மேலும், ஊசிகள், கையுறைகள், சக்ஷன் டிப்ஸ் போன்ற பொருள்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் (Disposable) வகையில் கையாளப்படுகின்றன. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் 121°C முதல் 134°C வரையிலான அதிக வெப்பம் மற்றும் நீராவி அழுத்தத்தில் குறிப்பிட்ட நேரம் வைக்கப்படுகின்றன. இந்த வெப்பத்தில் எப்படிப்பட்ட வீரியமிக்க வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உட்பட அனைத்துக் கிருமிகளும் முற்றிலும் அழிந்துவிடும். ஒரு நோயாளிக்கு பயன்படுத்திய பிறகு, கருவிகள் நேரடியாக மற்றவருக்குப் பயன்படுத்தப்படாது.Doctor Vikatan: பல்லைப் பிடுங்கிய இடத்தில் இடைவெளி விட்டால் மற்ற பற்கள் நகருமா? ஒரு நோயாளிக்கு பயன்படுத்திய பிறகு, கருவிகள் நேரடியாக மற்றவருக்குப் பயன்படுத்தப்படாது. பலகட்ட சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படும். சுத்தம் செய்யப்பட்ட கருவிகள் கிருமி புகாதபடி, பாக்கெட்டுகளில் பத்திரப்படுத்தப்படும். கிருமிநீக்கம் செய்யப்பட்ட கருவிகள், அடுத்த நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் வரை பிரிக்கப்படாது. தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பொருள்கள் எதுவுமே மறுபயன்பாடு செய்யப்படுவதில்லை. மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் புதிய கையுறைகள் (Gloves) மற்றும் முகக்கவசங்களை (Masks) மட்டுமே பயன்படுத்துவர். கருவிகள் மட்டுமன்றி, பல் மருத்துவ நாற்காலி (Dental Chair) உள்ளிட்டவையும், சுற்றியுள்ள பகுதிகளும் ஒவ்வொரு நோயாளி அமர்வுக்குப் பிறகும் மருத்துவ கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என்பதால் தொற்று பயம் தேவையில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/health/does-hiv-infection-spread-through-instruments-used-in-dental-treatment




