சென்னை, கடந்த 1-ம் தேதி குறைந்து விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை நேற்று முன்தினம் சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே போல் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்றைய தங்கம் விலை நேற்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை சென்னையில் வெள்ளி விலை 7 நாட்களுக்கு பிறகு ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ. 5,000 உயர்ந்து ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-surged-sharply-what-is-the-situation-today




