சென்னை, தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் மழை இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. மாநகர், புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, கிண்டி, மீனம்பாக்கம், பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/weather/widespread-rain-in-various-parts-of-chennai-6




