சென்னை, தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதன் காரணமாக சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது. சென்னையில் மழை இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. அடையாறு, தாம்பரம், மயிலாப்பூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, கிண்டி, சோழிங்கநல்லூர், பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், மீனம்பாக்கம் உள்பட நகரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/weather/widespread-rain-in-various-parts-of-chennai-4




