திருப்பூர், தாராபுரம் என்பது இனி விசில் சின்னத்தின் கோட்டை என்பதை நாம் நிரூபித்து காட்ட வேண்டிய காலம் இது என செங்கோட்டையன் தெரிவித்தார். நாட்டின் விடிவெள்ளி தாராபுரம் தொகுதியில் இன்று நடைபெற்ற தவெக கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:- வரலாற்று சிறப்புமிக்க தாராபுரம் தேர்தல் பிரசாரத்தில் வெற்றித் தளபதி கையில்தான் தமிழகத்தின் எதிர்காலத்தை மக்கள் ஒப்படைத்திருக்கிறார்கள். உங்களைத்தான் நம்பி இருக்கிறார்கள். நாட்டின் விடிவெள்ளியாக திகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். குடிநீர் திட்டம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை தளபதியின் செயலை பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். தாராபுரம் இனிமேல் விசிலின் கோட்டை என நிரூபித்து காட்டுகின்ற காலம்தான் வருகின்ற 6-ம் தேதி என்பதை மறந்து விடக்கூடாது. ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அனைவருடைய வேண்டுகோள். 147 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்டத்திற்கான ஆணையை வழங்கும் நாளாக இந்த நாள் திகழ்ந்திடும். இந்திய நாடே வியக்கத்தக்க வகையில் இரு தொகுதிகளின் தீர்ப்பு அமையும். வெற்றித் தளபதி கைகளில் ஒப்படைப்போம் வெற்றியை ஒப்படைபோம். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-will-henceforth-be-the-stronghold-of-the-whistle-symbol-sengottaiyans-speech




