'லவ்வர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கௌரி ப்ரியா. சமீபத்தில் தெலுங்கில் இவரது நடிப்பில் 'சென்னை லவ் ஸ்டோரி' படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஸ்ரீ கௌரி ப்ரியா 'Hindustan Times' ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். ஸ்ரீ கௌரி ப்ரியா அதில் பேசியிருக்கும் அவர், " சின்ன வயசுல தெலுங்கு, தமிழ் படங்களுக்கு இடையில இருக்க வித்தியாசத்த புரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு விவரம் இல்ல. ஏன்னா இங்க நிறைய படங்கள் டப் ஆகிதான் வரும். எனக்கு பிடித்த படங்கள்ல நிறைய தமிழ் டப்பிங் படங்கள் தான் இருந்துச்சு. தமிழ்ல இருந்து தெலுங்குக்கு டப் ஆன நிறைய பாடல்களை பாடுவேன். கொரோனா ஊரடங்கு சமயத்துலத்தான் படங்களை அந்தந்த மொழிகளிலேயே பார்க்க ஆரம்பிச்சேன். அதுதான் என்னை தமிழ் சினிமாவுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு வந்துச்சு. Toxic: "நான் கர்ப்பமாக இருந்த செய்தியை யஷிடம் சொன்னேன், அப்போது அவர்."- கியாரா அத்வானி நெகிழ்ச்சி தமிழ் என்னோட தாய்மொழி கிடையாது. படப்பிடிப்பின் போது தமிழிலேயே பேச ஆரம்பிச்சேன். என்னோட ரெண்டாவது படத்துக்குள்ளேயே என்னால வசனங்களை நல்லா புரிஞ்சுகிட்டு பேசுற அளவுக்கு மொழியைக் கத்துக்கிட்டேன். நிறைய தெலுங்கு மக்கள் என்னை தமிழ்நாட்ல இருந்து டோலிவுட்டுக்கு வந்த தமிழ் பொண்ணுன்னு தான் நினைச்சுகிட்டு இருக்காங்க. ஸ்ரீ கௌரி ப்ரியா ஆனா உண்மை அது கிடையாது. நான் தமிழ்ல கொஞ்சம் நல்லா நடிச்ச ஒரு தெலுங்கு பொண்ணு அவ்வளவுதான். தமிழ் மக்களும் என்னை அவங்கள்ல ஒருத்தரா ஏத்துக்கிட்டு, நான் தமிழ் பேசுற திறமையைப் பார்த்து ஆச்சர்யப்படுறாங்க. இது எனக்கு ரொம்ப பெருமையாவும், இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்கமாவும் இருக்கு" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/tollywood/sri-gouri-priya-says-people-think-im-tamil




