வாஷிங்டன், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறி அலெக்ஸாண்டர் பிளாக்ஸ் வரலாற்று சாதனை படைத்துள்ளார். 4-வது சுற்று அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில், பெல்ஜியத்தின் அலெக்ஸாண்டர் பிளாக்ஸ், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார். வரலாற்றுச் சாதனை இப்போட்டியில், செருண்டோலோவை 6-3, 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்திய அலெக்ஸாண்டர் காலிறுதிக்கு முனேறினார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு வரலாற்றில் காலிறுதிக்கு தகுதிபெற்ற முதல் பெல்ஜிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அடுத்த போட்டி காலிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொள்கிறார். கச்சனோவ் தனது 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் லேர்னர் டியனை 7-5, 4-6, 6-7 (6/8), 6-1, 6-4 என்ற கணக்கில் போராடி வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/tennis/blockx-first-belgian-man-to-reach-us-open-quarter-finals




