சென்னை, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இணை ஆணையாளர் ஆய்வு பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., இன்று (07.08.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணி இணை ஆணையாளர் (பணிகள்) அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-70க்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் பணி, வார்டு-68க்குட்பட்ட 70 அடி சாலையில் அமைக்கப்பட்டு வரும் நீர் உறிஞ்சும் பூங்கா பணி, ஜவஹர் நகர், முதல் பிரதான சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணி, வார்டு-72க்குட்பட்ட காந்தி கால்வாயில் ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி மற்றும் பவுடர் மில்ஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, வார்டு-69க்குட்பட்ட சோமையா தெருவில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, மண்டல அலுவலர் (பொ) சதீஷ் மற்றும் மண்டல நல அலுவலர், மண்டல மருத்துவ அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-works-chennai-corporation-joint-commissioner-inspection




