கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி பாரூர் பெரிய ஏரியிலிருந்து 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தண்ணீர் திறந்து விட உத்தரவு தமிழ்நாடு முதல்-அமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் ஐந்து நாட்களுக்கு நாற்றுவிட தண்ணீர் விட்டும் பிறகு முறைப்பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறந்துவிட்டும். 130 நாட்கள் 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6.00 மி.க.அடி வீதம் 16.07.2026 முதல் 22.11.2026 வரை 130 நாட்களுக்கு மொத்தம் 361.00 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து முதல் போக சாகுபடிக்கு 2397 ஏக்கருக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-tamil-nadu-government-orders-the-release-of-water-from-barur-big-lake-for-130-days




