சென்னை, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, கோயம்புத்தூரில் சர்வதேச தரத்திலான தொழில் வளர் காப்பகம் அமைப்பது தொடர்பாக, தெலங்கானா மாநில அரசின், தகவல் தொழில் நுட்பம், மின்னணுவியல், தகவல் தொடர்பு, தொழில் வணிகம் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறை மந்திரி ஸ்ரீதர் பாபுவுடன், ஹைதராபாத்தில் டி ஹப், டி வொர்க்ஸ் மையங்களைப் பார்வையிட்டு, கலந்துரையாடினார். இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், 2026-27-ஆம் ஆண்டில் மானிய கோரிக்கை அறிவிப்பில் கோயம்புத்தூரில் சர்வதேச தரத்திலான தொழில் வளர் காப்பகம் (இன்குபேட்டர்) அமைக்கப்படும். இதன் மூலம் சர்வதேச தரத்திலான சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய சிக்கல் மற்றும் தேவைகள் கண்டறியப்பட்டு அதற்கு தீர்வு காண விழையும் தொழில் முனைவோர் ஒருங்கிணைக்கப்படுவர். அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல், நிதி உதவி உள்ளிட்ட ஆதரவுகளை வழங்குவதன் வாயிலாக நடைமுறை சிக்கல்களுக்கு புதுமையான தீர்வுகளை காணவல்ல புத்தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார்கள். ஸ்டார்ட்அப் வளர்ச்சி இத்திட்டத்தை இந்த ஆண்டில் செயல்படுத்திடும் நோக்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, தெலங்கானா ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு அளித்து வரும் தலைவர்களில் ஒருவரான தெலங்கானா மாநில அரசின் தகவல் தொழில் நுட்பம், மின்னணுவியல், தகவல் தொடர்பு, தொழில் வணிகம் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறை மந்திரி ஸ்ரீதர் பாபுவுடன், ஹைதராபாத்தில் உள்ள டி ஹப் (T Hub) தொழில் காப்பக மையத்தையும், நாட்டின் மிகப்பெரிய முன்மாதிரி தயாரிப்பு மையமான டி வொர்க்ஸ் (T Works) நிறுவனத்தையும், 21.09.2026 அன்று பார்வையிட்டார். இந்நிகழ்வில், தெலங்கானா மாநில தகவல் தொழில் நுட்ப மந்திரி ஸ்டார்ட்அப் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை வளர்ச்சியில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட தெலங்கானா மாநில அரசு ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார். மேலும், இரு மாநிலங்களும் இணைந்து செயல்படும்போது, தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகும். எனவே, பல திட்டங்களில் இணைந்து செயல்படும் நோக்கில், தமிழ்நாட்டிற்கு தெலங்கானா மாநில அரசின் தகவல் தொழில் நுட்ப மந்திரி வருகை தருமாறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அழைப்பு விடுத்தார். இந்நிகழ்வின் போது தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநில அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/startup-hub-to-come-to-coimbatore-international-standard-business-incubator-minister-madanraja




