சென்னை, சட்டசபையில் கேள்வி நேரத்தில், த.வெ.க. உறுப்பினர் சத்யபாமா (திருப்பூர் வடக்கு), 'திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கே சுமார் 1,475 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளிக்கு அருகில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் ('டான்சி') நிலம் அமைந்துள்ளது. பள்ளிக்கு இடப்பற்றாக்குறை இருப்பதால் அந்த நிலத்தை வருவாய்த்துறை மூலம் நிலமாற்றம் செய்யப்படுமா? என துணை கேள்வியை எழுப்பினார். அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், 'வருவாய்த் துறை மூலம் டான்சி நிலத்தை பயன்படுத்தவில்லை என்று தெரிந்தால் அவர்களோடு பேசி அதற்கு பிறகு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dansi-land-be-transferred-to-the-corporation-higher-secondary-school-minister-sengottaiyan-responds




