சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ் திரையுலகின் ஒப்பற்ற கலை மேதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று, தனது அபாரமான நடிப்பாலும், உணர்வுகளை உயிர்ப்பிக்கும் வசன உச்சரிப்பாலும், தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் இதயங்களில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பெரும் ஆளுமை ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தமிழ் மொழியின் பெருமையையும் கலை உலகின் உயர்வையும் உலக அரங்கில் எடுத்துச் சென்ற பெரும் ஆளுமை அவர். அவர் ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும், வெளிப்படுத்திய ஒவ்வொரு உணர்வும், இன்றளவும் போற்றப்படுகிறது. காலம் கடந்தாலும் அவரது புகழும், கலைப் பாரம்பரியமும் என்றும் நிலைத்திருக்கும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு என்றும் தமிழர் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும். இவ்வறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-memory-of-actor-thilakam-sivaji-ganesan-will-always-remain-in-the-hearts-of-tamils-nainar-nagendran




