புதுடெல்லி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நேற்று கோலாகலமாக தொடங்கின. 45 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டிகள் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெறுகின்றன. இன்று 9 விளையாட்டுப் பிரிவுகளில் மொத்தம் 27 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் துப்பாக்கிச்சுடுதல், டெக்பால் மற்றும் வூஷு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெல்லும் வாய்ப்புடன் களம் காண்கின்றனர். இதுதவிர ஆக்கி, கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் உள்ளிட்ட போட்டிகளிலும் இந்திய அணிகள் பங்கேற்கின்றன. ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:- அதிகாலை 5.30 மணி: வூசூ சாங்குவான் இறுதிப்போட்டி (சுரஜ் சிங்), பெண்கள் 52 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று (அபர்ணா). ஆண்கள் 75 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று (விக்ராந்த் பாலியன்). காலை 6.15 மணி: துப்பாக்கி சுடுதலில் பெண்கள் 10 மீட்டர் ஏர்ரைபிள் தனிநபர் தகுதி சுற்று மற்றும் அணிகள் இறுதிப்போட்டி (இளவேனில், சோனம் மாஸ்கர், விதர்சா வினோத்). காலை 6.30 மணி: டெக்பால் பெண்கள் ஒற்றையர் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம் (டிசோசா). காலை 6.30 மணி: டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா-இந்தோனேசியா மோதல். காலை 7 மணி: டெக்பால் கலப்பு இரட்டையர் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம் (டிசோசா-முகமது அனாஸ்). காலை 7.30 மணி: ஆக்கி பெண்கள் பிரிவின் லீக் சுற்றில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் சந்திப்பு. காலை 9 மணி: டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியா-இந்தோனேசியா மோதல். காலை 10.30 மணி: பெண்கள் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா-வங்காளதேசம். காலை 11.30 மணி: ஆக்கி ஆண்கள் பிரிவின் லீக் சுற்றில் இந்தியா-இந்தோனேசியா மோதல். காலை 11.30 மணி: பேட்மிண்டன் பெண்கள் அணிகள் பிரிவின் முதல் சுற்றில் இந்தியா-கஜகஸ்தான் பலப்பரீட்சை. பகல் 12.30 மணி: டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா-சிங்கப்பூர் மோதல். மாலை 3 மணி: டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியா-ஈரான் சந்திப்பு. இந்திய வீரர்கள் மீது எதிர்பார்ப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியின் 2-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர். குறிப்பாக துப்பாக்கிச்சுடுதல், டெக்பால் மற்றும் வூஷு போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/27-gold-medals-will-be-decided-today-at-the-asian-games-india-will-play-medal-events-in-shooting-and-teqball-the-mens-and-womens-hockey-teams-will-also-compete




