தமிழ்நாட்டில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் தவெக அரசின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிறது. இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், " தமிழ்நாட்டில் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்கிற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. ஒவ்வொரு நாளையும் அச்சத்துடனும் அதிர்ச்சியுடனும் மக்கள் கடந்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் விஜய் கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை, கொலைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு செல்லப் போகிறதா இந்தப் பொறுப்பற்ற அரசு? சட்டம் ஒழுங்கில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாட்டின் நிலை இன்று எங்கே சென்று கொண்டிருக்கிறது? இது தான் தவெக சொன்ன மாற்றமா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இடைத்தேர்தல்: "கனத்த இதயத்துடன் ஏற்கிறோம்" - இடதுசாரிகளின் முடிவு குறித்து மாணிக்கம் தாகூர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/dmk-mp-kanimozhi-raises-questions-over-law-and-order-in-tamil-nadu



