ஏதேன்ஸ், கிரீசில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு கிரீஸ். இந்நாட்டின் தலைநகர் ஏதேன்சில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானப்படைக்கு சொந்தமான ஏராளமான போர் விமானங்கள் பங்கேற்றன. போர் விமானம் விபத்து இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சியின்போது கிரீஸ் விமானப்படைக்கு சொந்தமான எப்-4 பாத்தான் ரக போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போர் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதேவேளை, விபத்தில் சிக்கிய போர் விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் கீழே குதித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, போர் விமானம் தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விமான விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/greek-air-force-jet-crashes-at-annual-aerial-show-starts-fire




