அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பில் கலந்துகொண்ட முக்கியமான நபர்களில் ஒருவர் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி. அவர் ஈரானிய செய்தி நிறுவனத்துடனான பேட்டி ஒன்றில், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை எப்படி இருந்தது என்பதை குறிப்பிட்டுள்ளார். "நான் விட்காஃபிடம் (அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தையாளர்) கேட்டேன், 'எந்த நேரத்திலும் இந்த இடத்தில் குண்டு வீசப்படலாம் என்று நீங்கள் பயப்படும்படியான ஒரு கூட்டத்தில் எப்போதாவது இருந்திருக்கிறீர்களா? ஈரான் போர்'ரத்தத்திற்கு ரத்தம்' கேட்கும் ஈரான்; ட்ரம்ப் குடும்பம் மீது குறியா? நீங்கள் போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே, நீங்கள் வெடித்துச் சிதறலாம் அல்லது அழிக்கப்படலாம் என்ற அச்சத்தோடு எப்போதாவது பேசியிருக்கிறீர்களா? உதாரணமாக, போன் மூலம் உங்கள் குடும்பத்தினரின் நலனை விசாரிக்கும் போது, இதுவே அவர்களுடன் பேசும் கடைசி முறையாக இருக்கலாம் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?' அணுசக்தி செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற கோரிக்கைக்கு நாங்கள் பணிய மறுத்து, உறுதியாக நின்றோம். பேச்சுவார்த்தைகள் மூலம் தாங்கள் நினைத்ததைச் சாதிக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்த போதுதான், இந்தப் போரைத் தொடங்கினார்கள். நீங்கள் பேச்சுவார்த்தை தான் நடத்த வேண்டும். எங்களை மிரட்டவும் முடியாது, விலைக்கு வாங்கவும் முடியாது. இது ஒன்றும் வெனிசுலா கிடையாது. ஒருவரைப் பிடித்து மிரட்டினால் மற்ற அனைவரும் பயந்து பின்வாங்குவதற்கு." என பேசியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவை 'சாத்தான்' என்று விமர்சிக்கும் மொஜ்தபா; ஈரான் மக்களுக்கு விடுத்த கோரிக்கை என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/iran-abbas-araghchi-shares-details-of-high-stakes-us-talks




