சென்னை, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒரேநாளில் இரு முறை ஏற்றம் கண்டது. இதனிடையே, சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ. 140 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,560க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,480க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 260க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 2,50,000க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இந்நிலையில், சென்னையில் இன்று (07.07.2026 - செவ்வாய்கிழமை) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமிற்கு ரூ. 110 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் சவரனுக்கு ரூ. 880 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,07,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை அதேவேளை, வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 250க்கும், ஒரு கிலோ ரூ. 2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/today-gold-rate-in-chennai-on-07-07-2026




