சென்னை, பள்ளிக் கல்வி இயக்குனராக பணிபுரிந்த கண்ணப்பன் இன்று பிற்பகலுடன் ஓய்வு பெற்றார். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிலிருந்து முனைவர்.ச.கண்ணப்பன் இன்றுடன் ஓய்வு பெற்றார்.பள்ளிக் கல்வித்துறை சார்பாக நன்றியும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் இயங்கும் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், புதிய இயக்குநர் நியமனம் பற்றி அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பொறுப்பு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதாவிற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிக்கல்வி இயக்குநராகப் பணிபுரியும் முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள் 31.07.2026 பிற்பகல் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறுவதால், பள்ளிக்கல்வி இயக்குநரின் பணிகளை கவனிக்கும் பொருட்டு நிர்வாக நலன் கருதி, தற்போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக பணிபுரியும் திருமதி. ந. லதாஅவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கான முழு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/kannappan-who-served-as-the-director-of-school-education-retires-additional-allocation-for-latha



