ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. ஈரானின் சபஹார் துறைமுகம், இரான்ஷார் விமான நிலையம் எனத் தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கெல்லாம் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. பஹ்ரைன் உள்ளிட்ட மத்தியக் கிழக்கு பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான். மேலும், ஈரான் தரப்பில் இருந்து அமெரிக்காவிற்கு விடப்பட்ட எச்சரிக்கைகள். அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப்: "மிரட்டுவதற்கும் கொடுத்த வாக்கை மீறுவதற்கும் இனிமேல் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தப்பித்துவிட முடியாது என்பதை அமெரிக்கா இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. நான் இன்னும் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்கிறேன் - நீங்கள் தாக்கினால், உங்களுக்கும் திருப்பி அடி விழும். காலிபாஃப் ஈரான் துறைமுகம், விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 'ட்ரம்ப் உத்தரவின் பேரில்' என விளக்கம் வீணாக அடித்துக் கொண்டு அலைவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் இன்னும் ஆழமான சேற்றில் மூழ்கிவிடுவீர்கள். அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்காது. அது 'ஈரானின் முடிவுகளுக்கு' ஏற்ப மட்டுமே திறக்கும்." ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கரிபாபாதி: "ஈரானிய தேசத்தை அவமதிப்பதில் இருந்து, கூடுதல் தாக்குதல்களை நடத்துவோம் என அச்சுறுத்துவது வரை இன்று ட்ரம்ப் வெளியிட்டிருக்கும் அறிக்கைகள் ஒன்றும் அவரது வலிமையின் அடையாளம் அல்ல. மாறாக, பல ஆண்டுகளாகப் பிரயோகிக்கப்பட்ட கொடூரமான படைபலம், பொருளாதாரத் தடைகள் மற்றும் மிரட்டல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு கொள்கையின் தோல்வியடைந்தது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமே இதுவாகும். இவற்றை ஈரானிய தேசத்தை ஒருபோதும் மண்டியிட வைக்க முடியவில்லை. குற்றவாளியாகவும் கொலையாளியாகவும் இருக்கும் இந்த ட்ரம்பிடம், அவருக்குப் புரியும் மொழியிலேயே பேச வேண்டும். வெளிப்படையாகச் சொன்னால், பலவந்தத்தின் மொழியைத்தான் அவர் நன்றாகப் புரிந்துகொள்கிறார் போலிருக்கிறது!" "அவர்கள் பொய்யர்கள்; ஈரான் போர் நிறுத்தம் முடிந்துவிட்டது" - ட்ரம்ப் அதிரடி பேச்சில் சொல்வதென்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/iran-warns-us-as-military-conflict-enters-dangerous-phase




