செங்கல்பட்டு, திருமலை வையாவூரில் உள்ள பெருமாள் கோவிலில் அமைச்சர் ராஜ்மோகன் இன்று சாமி தரிசனம் செய்தார்.ச் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருமலை வையாவூரில் புகழ்பெற்ற இந்து மத வழிபாட்டு தலமான பெருமாள் கோவில் உள்ளது. தென் திருப்பதி அல்லது குட்டி திருப்பதி என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்துகின்றனர். அமைச்சர் ராஜ்மோகன் சாமி தரிசனம் இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று திருமலை வையாவூர் பெருமாள் கோவில் சாமி தரிசனம் செய்தார். பக்தர்களோடு வரிசையில் நின்று அமைச்சர் ராஜ்மோகன் சாமி தரிசனம் செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumalai-vaiyaavoor-perumal-kovilil-amaichar-rajmohan-saami-darisanam




