சென்னை, தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில், 2 நாள் விடுமுறை முடிந்து தமிழக சட்டசபை காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் இரங்கல் குறிப்புவாசிக்கப்பட்டது. தொடர்ந்து பட்ஜெட் பொது விவாதத்தின் போது "நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்; நாங்கள் அனைவரும் டென்ஷனாக இருக்கிறோம் என்று சட்டமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதில் அளித்து கூறுகையில், தினம் தினம் டென்ஷன் “சின்ன வாய்க்கால் பிரச்சினைதான். இன்று காலையில்கூட போன்செய்து சரியாகிவிட்டாதா என்று கேட்கக்கூடிய முதல்-அமைச்சர்தான் இருக்கிறார்; நீங்களாவது. 5 வருஷம் டென்ஷனாக இருந்தீங்க. நாங்கள் தினம் தினம் டென்ஷனாக இருக்கிறோம்; சின்ன விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு அப்படியொரு பயம் இருக்கிறது. என்று அவர் கூறினார். தொடர்ந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், “அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் எப்போதும் பிசி ஆனந்தாக வலம் வருகிறார். அனைத்து கட்சித் தொண்டர்களும் அவரை பார்த்து வருகின்றனர்; புதிதாக வந்த இயக்கம். இனிமேல் தான் உங்களுக்கு தெரியபோகிறது. பேசுவது எளிது; அதை செயல்படுத்தும்போது தான் கஷ்டங்கள் தெரியும்” என்று பேசினார். இதனால் அவையில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-under-tension-every-single-day-minister-anand




