ஆலோசனையில் பழனிசாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு வந்த தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட, அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும், சீனியர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். இப்படி அதிமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் வேளையில், இன்று முதல் வருகிற 9-ம் தேதி வரை, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். எடப்பாடி பழனிசாமி இனி அசாம் சட்டமன்றத்தில் இந்தியில் பேசலாம்! அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக அலுவல் மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், இன்று முதல் அசாம் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இந்தியில் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தி தேசிய மொழி என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அசாம் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, அசாமிய மொழி, ஆங்கிலம், போடா ஆகிய மொழிகள் அலுவல் மொழியாக இருந்துள்ளது. அசாம் சட்டமன்றம் செந்தில் பாலாஜிக்கு 'Look out Notice' தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் ரூ.35 கோடிக்கு பேரம் பேசியதாக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் மனுவை அளித்தார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்.எல்.ஏ டாக்டர் இளையராஜா. இந்த வழக்கை விசாரித்ததில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாரை தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய நிகழ்வுகளை இந்த Live Blog-ல் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/live-updates-of-tamilnadu-and-india-political-events-06-07-2026




