இன்று மாலை சென்னை அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற இருந்தது. ஆனால், அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. திமுகவின் மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். துரைமுருகன் அறிவிப்பு இந்த நிகழ்வுக்குப் பிறகு, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். “எங்கள் தலைவர் ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று மாலை நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின்ஈரான் போர்: "உலக நாடுகள் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்" - ட்ரம்ப் புதிய கணக்கு விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று நாள்களையும் இணைத்துக் கொண்டாடப்படுவதுதான் இந்த முப்பெரும் விழா ஆகும். வழக்கமாக, இந்த முப்பெரும் விழாவில் ஸ்டாலின் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/dmk-mupperum-vizha-postponed-as-stalin-suffers-viral-fever




