தேமுதிக-வின் 22-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ``2005-ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களால் மதுரையில் 28 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் சூழத் தொடங்கப்பட்ட தேமுதிக, இன்று 22-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. தமிழ்நாடு முழுவதும் எங்களது நிர்வாகிகள் 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற தலைவரின் உயரிய வழிகாட்டலின்படி நலத்திட்ட உதவிகளை வழங்கி இத்தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அரசியலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனிப்பட்ட நிலைப்பாடு உண்டு. இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது அவர்களுடைய முடிவு. ஆனால், எங்களைப் பொறுத்தவரை தே.மு.தி.க அங்க வகிக்கும் தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். பிரேமலதா மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதி வேட்பாளர் சுகன்யா ஆகியோரை அறிவிக்கும் முன்பே அண்ணன் ஸ்டாலின் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார். அதற்கு தே.மு.தி.க-வின் 100 சதவீத முழு ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்கும் என்று நான் உறுதியளித்தேன். தி.மு.க வேட்பாளர்கள் தலைமைக் கழகத்திற்கு நேரில் வந்தும் வாழ்த்துப் பெற்றனர். முதலமைச்சரும் பிரசாரத்திற்கு அழைத்துள்ளதால், நிச்சயம் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவேன். பரந்தூர் முதல் பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் வரை, அரசு கொண்டு வரும் எந்தவொரு திட்டமும் மக்களுக்காகவே கொண்டு வரப்படுகிறது. ஒட்டுமொத்த மக்களும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே எந்தவொரு திட்டமும் முழுமையான வெற்றியடையும். மக்கள் விரும்பும் திட்டங்களையே அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை சட்டமன்றத்திலும் நான் பதியவைத்துள்ளேன். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிபெற எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்றார். "தவெக-வினரே பெண்கள் மீது தவறான பதிவுகளைப் பதிவிடுகிறார்கள்" - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/celebration-marking-commencement-of-dmdks-22nd-year-took-place-in-chennai-today




