சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரின் நடவடிக்கைளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமிக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டிருப்பதாக சந்தேகமடைந்த சிறுமியின் தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் உதவியை நாடியிருக்கிறார். அவர்கள் வந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், "நண்பர்களாக உள்ள சக சிறுமிகளின் சகோதரர் உள்ளிட்ட சில இளைஞர்கள் நட்பாக பழக ஆரம்பித்து பீர் உள்ளிட்ட மதுவகைகளை வாங்கிக் கொடுத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்தார்கள்" என கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்ததாக 2 சிறுவர்கள் உட்பட 4 இளைஞர்கள் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குபதிந்து கைது செய்துள்ளனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட மேலும் சில இளைஞர்களை தேடி வருகின்றனர். Child Abuse இந்த அதிர்ச்சி பின்னணி குறித்து நம்மிடம் பேசிய மகளிர் காவல்துறை அதிகாரி ஒருவர், "13, 15, 16 வயதுடைய மூன்று சிறுமிகள் நட்புடன் இருந்துள்ளனர். குடியிருப்பு அருகில் உள்ள ஏரிக்கரை பகுதிக்கு மாலை நேரங்களில் வாக்கிங் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 13 வயது சிறுமியிடம் அறிமுகமான இளைஞர்கள் சிலர் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். மேலும் அந்த சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். 7 நபர்களுக்கு மேல் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம். 19 வயதுடைய ஆகாஷ், 23 வயதுடைய பாலமுருகன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். 2 சிறுவர்களை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகிறோம்" என்றார். 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி ஓராண்டுக்கும் மேலாக பல இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/salem-girl-child-sexual-abuse-case-2-minors-arrested




