சென்னை, விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்களில் 11, 12-ந்தேதிகளில் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். சிறப்பு பஸ் தொடர் விடுமுறை முடிந்து 14 மற்றும் 16-ந் தேதிகளில் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பயணிகள் சிரமமின்றி சென்னை திரும்பும் வகையில் 14-ந்தேதி 2,240 சிறப்பு பஸ்களும், 15-ந்தேதி 1,325 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,565 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் வரும் பயணிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-series-holiday-231-lakh-people-travel-in-government-buses




