தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நடந்த பட விழாவில் பங்கேற்று பேசிய சந்தீப் கிஷன் கூறியதாவது:- "சினிமாவை முழுமையாக படித்து வந்து ஜேசன் சஞ்சய் படம் எடுத்திருக்கிறார். அவர் பெரிய ஹீரோவாக வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் இயக்குனராக தான் அவரது தேடல் சினிமாவில் இருக்கிறது என்பதால் அதனை நான் மதிக்கிறேன். எனக்கு ஜேசன் சஞ்சய் நல்ல நண்பர். அவரது அடுத்த படத்தில் கவுரவ தோற்றம் என்றாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். அந்தளவு எங்களுக்குள் நல்ல நட்புறவு இருந்து வருகிறது" என்றார். இந்த படத்துக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த இயக்குனர் ஜேசன் சஞ்சய் சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சியில் உடல் நலக்குறைவு காரணமாக கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jason-sanjay-should-become-big-hero-sundeep-kishan-wish



