முழு கட்டுரை
தவெக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், சென்னையில் இன்று (ஜூன்.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர், "திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், பாஜக-வின் ஆதரவோடு ஆட்சி அமைக்கச் செயல்பட்டார்கள். அதனால்தான் அவர்களின் கூட்டணிக் கட்சிகளில் இருந்து அவ்வளவு பேர் வெளியேறி இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். பிற கட்சிகளில் இருந்து யாராவது வெளியேறினால் அதற்கும் தவெக-விற்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்தக் கட்சியில் இணைந்து செயல்படுவது என்பது அவரவர் முடிவு. தமிழ்நாட்டில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சிதான் என்பது உறுதியாகி உள்ளது. மு.க.ஸ்டாலின், உதயநிதி, இ.பி.எஸ், அவருடைய மகன் மற்றும் சில தொழிலதிபர்கள் இணைந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரும் இபிஎஸ் குடும்பத்தினரும் தங்கள் குடும்ப சொத்தை காக்கவே இந்த முயற்சி செய்கின்றனர். பல வழக்குகள் வரும் என்ற பயத்தில் இன்று காலை வரை திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்கின்றன. தவெக நிர்மல் குமார் திமுக, அதிமுக சேர்ந்து பாஜக-விடம் சரண்டர் ஆகி, ஒரு கேபினட் இடம் கேட்டு நிற்கப் போகின்றன. இரண்டு வருடங்களில் திமுகவும் அதிமுகவும் பாஜகவில் இணைந்துவிடும். ஸ்டாலினும், எடப்பாடியும் வீட்டுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுவிட்டு கட்சியை இணைத்து விடுவார்கள். இவர்கள் பதவிக்கு ஆசைப்படுவதால் மற்ற கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகுகின்றனர்" என்று பேசியிருக்கிறார். கரையும் அதிமுக... தனித்துவிடப்பட்ட திமுக! – தமிழக அரசியல் களத்தில் மாறும் அதிகாரச் சமன்பாடுகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
விரைவாகப் படிப்பதற்கான தமிழ் சுருக்கம் இது. முழு செய்தி, கூடுதல் சூழல், புதுப்பிப்புகளுக்கு அசல் வெளியீட்டாளரின் தளத்தைத் திறக்கவும்.
முழுக் கட்டுரை — கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்




