நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயின. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 320-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 1500-க்கும் மேற்பட்டோர் நிலவரம் என்னவென்று தெரியாமல் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ஆழ்ந்த கவலையையும் மனவேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா இது தொடர்பாக அவர் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ``நேபாளத்தில் இருந்து வரும் காட்சிகளைப் பார்ப்பது மிகவும் பயமாகவும், மனவேதனையாகவும் இருக்கிறது. அங்கிருக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றும், சூழ்நிலை விரைவில் சீரடைய வேண்டும் என்றும் நான் பிரார்த்திக்கிறேன். தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்." என்று பதிவிட்டுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், ``"இயற்கை கொஞ்சம் கருணை காட்டும் என்று நம்புகிறேன்; பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். Nepal: "என் குடும்பமே கண்முன்னே காணாம போயிருச்சு." - இடுப்பளவு சேற்றில் உடல்களைத் தேடும் உறவுகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/tollywood/actresses-rashmika-and-keerthy-suresh-express-deep-concern-about-nepal-flood



