திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாக்களில் கலந்துகொள்ள, ஆந்திர மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்குத் தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது. பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கின்றன. முதலில் 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 9 நாட் கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவும், அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரம்மோற்சவ அழைப்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாக்களில் பங்கேற்பதற்காக, ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டம் பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள், பக்தர்களுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/tiruppati-brahmotsava-festival-invitation-to-chandrababu-naidu




