சென்னை, ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளில் அவரின் சமூக பணிகளை போற்றுவோம்; சமூக நீதியை வென்றெடுக்கும் வரை போராடுவோம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராமசாமி படையாட்சியார் 109-வது பிறந்தநாள் ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளையொட்டி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான பெரியவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 109-ம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன். சமூக நீதியை வென்றெடுக்கும் வரை போராடுவதற்கு உறுதியேற்போம்! பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அவர் பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பணிகளைப் போற்றும் இந்த நாளில், சமூக நீதியை வென்றெடுக்கும் வரை போராடுவதற்கு உறுதியேற்போம்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-appreciate-the-social-work-of-ramasamy-padayatchiyar-anbumani-praises




