கேப் டவுன், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. 2வது ஒருநாள் போட்டி இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. ஜோகனர்ஸ்பெர்க்கில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-odi-south-africa-vs-australia-clash-tomorrow



