சென்னை, ஒவ்வொரு முறையும் நான் தோல்வியை, சரிவை சந்திக்கும்போது நம்பிக்கையுடன் மீண்டு வருகிறேன் என பேட்டியில் தமன்னா பேசியுள்ளார். பிசியான நடிகை தமன்னா இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர், தனது நடிப்புடன் கவர்ச்சி நடனங்களாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கும் 'புருஷன்' திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர இந்தியில் 5 புதிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர தொழில் அதிபராகவும் (நகை விற்பனை) கலக்கி வருகிறார். உச்சத்தில் சென்ற மார்க்கெட் 'மில்க்கி பியூட்டி' என ரசிகர்களால் அழைக்கப்படும் தமன்னா, ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இந்தியில் வெளியான 'ஸ்த்ரீ 2' படத்தின் 'ஆஜ் கி ராத்' பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் தமன்னாவின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது. என் கனவுகளை துரத்திச் செல்கிறேன் இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை தமன்னா, "என் பயணம் அதிக வேகத்தடைகளை கொண்டது. ஆனாலும் என் வேகத்தை குறைக்காமலும், நிதானம் தவறாமலும் என் கனவுகளை துரத்திச் செல்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் தோல்வியை, சரிவை சந்திக்கும்போது நம்பிக்கையுடன் மீண்டு வருகிறேன். அந்த மனநிலையே என் வலிமையாக பார்க்கிறேன். அதை எப்போதுமே கைவிட மாட்டேன்”, என்று குறிப்பிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-am-journeying-ceaselessly-towards-my-dreams-actress-tamannaah




