சென்னை, 'ராமாயணம்' திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மறுத்ததால், அந்த வாய்ப்பு சாய் பல்லவிக்கு சென்றதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு தற்போது ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். ஆடிஷனில் பங்கேற்றேன் சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய ஸ்ரீநிதி ஷெட்டி, "'ராமாயணம்' திரைப்படத்தில் சீதையாக நடிக்க என்னைத்தான் முதலில் அணுகி, நான் மறுத்ததால் அந்த வாய்ப்பு சாய் பல்லவிக்கு சென்றது என்பது உண்மையல்ல. நான் அந்த கதாபாத்திரத்திற்காக ஆடிஷனில் பங்கேற்றேன். ஆனால், தேர்வாகவில்லை" என்று கூறி வதந்திகளுக்கு ஸ்ரீநிதி ஷெட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கேஜிஎப் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஸ்ரீநிதி ஷெட்டி,'கேஜிஎப்' திரைப்படங்களில் நாயகியாக நடித்து இந்திய அளவில் பிரபலமானார். பின்னர் தமிழில் விக்ரமுடன் 'கோப்ரா' திரைப்படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நானி நடித்த 'ஹிட்: தி தேர்ட் கேஸ்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது 'ஆதர்ஷ குடும்ப ஹவுஸ்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/how-did-sai-pallavi-land-the-role-of-sita-srinidhi-shetty-reveals-the-truth




