டர்பன், தென் ஆப்பிரிக்காவின் எஸ்.ஏ.20 லீக் தொடரில் விளையாடும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் அல்பி மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான அல்பி மோர்கல், ஜாபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி அமைப்பில் ஏற்கனவே முக்கிய பங்கு வகித்து வந்தார். தற்போது தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், அணியின் திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளை அவர் முன்னெடுக்க உள்ளார். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அல்பி மோர்கலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/albie-morkel-appointed-as-joburg-super-kings-head-coach




