குமரி, ஆற்றில் முதலை நடமாட்டம் கோதையாற்றில் கடையாலுமூடு, களியல் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனை பலர் செல்போன் களில் படம்பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும், முதலையை பிடித்து அகற்றிட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதனை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக ஆற்றில் முதலை காணப்பட்ட உறைகிணற்றின் அருகில் மிதவை கூண்டு வைத்தனர். ஆனாலும் முதலை அதில் சிக்கவில்லை. அந்த முதலையானது சில நாட்கள் தென்படுவதும், பின்னர் மாயமாவதுமாக இருந்து வருகிறது. வல்லுனர் குழு வருகை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் தென்படுகிறது. மேலும், ஆற்றுப்பகுதியில் பல கி.மீ தூரம் மிக நீண்ட பகுதியாகவும், கரையோரங்களில் செடிகள் மற்றும் புதர்கள் மண்டிக்கிடப்பதால் அந்த வழியாக வனத்துறையினர் நடந்து சென்று முதலையை கண்காணிப்பது எளிதான செயலாக இல்லை. இந்தநிலையில் முதலை குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருவதால், அதனை பிடித்து அகற்ற வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதனால் வனத்துறை மற்றும் முதலை ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய வல்லுனர் குழு களத்தில் இறங்கியுள்ளது. இந்த குழு கடந்த 2 நாட்களுக்கு மேலாக ஆற்றுப்பகுதியில் படகிலும், நடந்து சென்றும் முதலையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை தேடி வருகின்றனர். அதன்படி நேற்றும் இந்த குழுவினர் ஆற்றில் படகில் சென்றவாறு முதலையை தேடினர். ஆற்றில் குளிக்க. இந்தநிலையில் முதலையை பிடிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து களியல் வனச்சரக அலுவலர் யோகஸ்வரன் கூறுகையில், முதலையை பிடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் வனத்துறை தீவிரமாக உள்ளது. தற்போது ஆற்றுப்பகுதி முழுவதும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி வருகிறோம். மழை காரணமாக தற்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக பாய்கிறது. வனத்துறையினர் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். குறிப்பாக ஆற்றின் கரையோரம் உள்ள படித்துறைகளில் மக்கள் குளிப்பதையும், தூண்டில் போட்டு மீன்பிடிப்பதையும் தவிர்த்தால் முதலையின் நடமாட்டத்தை உடனுக்குடன் கண்காணித்து அதனை பிடிக்க முடியும். என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/supplementary-counseling-for-engineering-courses-applications-open-from-the-17th




