மயிலாடுதுறை கும்பகோணம் பகுதிகளைச் சுற்றிலும் புண்ணியத் தலங்கள்தான். பார்க்கும் இடங்கள் எல்லாம் ஆலயங்கள்தான். இதில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வோர் ஆலயமும் ஒரு சிறப்பினையும் புராண வரலாற்றையும் உடையது. அப்படிப்பட்ட ஒரு தலம்தான் குத்தாலம் அருள்மிகு உக்தவேதீஸ்வரர் ஆலயம். மயிலாடுதுறை – கும்பகோணம் முக்கியச் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். இந்தப்பகுதி முழுவதும் உத்தால மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் ‘உத்தாலம்’ என்று அழைக்கப்பட்டு இன்று ‘குத்தாலம்’ என்று வழங்கப்படுகிறது. இந்தக் கோயிலில் விருட்சத்தை வலம் வந்தால், விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை. குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் முற்காலத்தில் இறைவனை நோக்கிப் பிள்ளைவரம் வேண்டி யாகம் செய்த பரத்வாஜ முனிவரின் வேள்வித் தீயில் அழகிய பெண் குழந்தையாக அவதரித்தாள் அன்னை. தங்கள் அருந்தவம் பலித்த மகிழ்ச்சியில் முனிவர் தம்பதிகள் இந்தக் குழந்தையைச் சீராட்டி வளர்த்தனர். குறித்த காலத்தில், இறைவன், உத்தால விருட்சத்தின் கீழேயே தோன்றி அன்னையைத் திருமணம் செய்துகொண்டார். ஈசனின் திருமண நிகழ்வின்போது சிவபெருமானுடன் அவரது திருக்குடையானது உத்தால மரமாகவும், அவரின் திருவடிகளைத் தாங்கிய திருப்பாதரக்ஷைகளாக வேதங்களும் உடன் வந்தன என்கிறது தலபுராணம். திருமண வைபவம் முடிந்த உடன் அவை ஈசனாருடன் மீண்டும் செல்லாமல் இத்தலத்திலேயே தங்கி விட்டன என்கின்றன ஞான நூல்கள். ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும் திண்டுக்கல் மாவட்டம் கோபிநாதன்மலை கோபிநாத சுவாமி கோயில்: பணிமாற்றம் அருளும் தென்னகத்து கோகுலம்! இத்தலத்தில் இறைவனுக்கு ‘சொன்னவாறறிவார்’ என்பது திருநாமம். தம்மை நாடி வருவோர்க்கும் திருமண யோகத்தினைத் தந்து அருளும் இந்த ஈசன் உத்தாலம் மரக்குடையோடும் வேதங்களே பாதரட்சைகளாகக் கொண்டவர் என்பதாலும் ‘உக்த வேதீஸ்வரர்’ என்பது திருநாமம். ‘உத்தவேதீஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார். இந்தக் கோயிலில் விருட்சத்தை வலம் வந்தால், விரைவில் கல்யாணம் கைகூடும்! இந்தச் சுவாமி, மேற்கு பார்த்த கம்பீரமான பெருந்திருமேனியர் என்பது சிறப்பு. அம்பிகையால் பூஜிக்கப்பட்டவர் என்பது அதைவிடச் சிறப்பு. இறைவி- அரும்பன்ன வனமுலையாள் என்கிற அமிர்த முகிழாம்பிகை. ‘மிருதமுகிள குஜாம்பிகை’ என்பது வடமொழிப் பெயர். குத்தாலம் அரும்பன்ன வனமுலையாள் தலவிருட்சமான உத்தாலக மரத்திற்கு நேராகத் தனி சந்நிதி கொண்டு தெற்கு நோக்கி அருள்கிறாள் இந்த அம்பிகை. சதா அலங்காரக் கோலத்தில் திகழ்பவள் இந்த அம்மை. ‘பரிமள சுகந்த நாயகி’ என்கிற திருநாமம் என்கிற திருநாமத்தோடு உள் சுற்றாலையில் பாலாவாகவும் அருள்கிறாள் அன்னை. உத்தாலக விருட்சத்திற்கு எதிர்புறத்திலேயே, அம்மையுடன் உடன் வந்த பிள்ளை, ‘துணை வந்த விநாயகர்’ என்ற திருநாமம் தாங்கியவராய் சந்நிதி கொண்டிருக்கிறார். இந்தத் தலத்தில் அம்மையப்பர் திருமணத்தைத் தாமே முன்னின்று நடத்திக் கொடுத்த புண்ணியர் இவர்தான். கூடுதலாக, சனியின் நேர்பார்வையைத் தணித்த மங்கள கணபதியாகவும் சுற்றாலையில் காட்சி தருகிறார். தவிர, ‘குபேரகணபதி’ என்கிற பெயரில் கோஷ்டத்தில் தலவிநாயகராகவும் காட்சி தருகிறார். ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்: கடன்கள் தீர்க்கும் கணபதி சந்நிதி திருமணத்தடை உள்ளவர்கள் முதலில் துணை வந்த விநாயகரை வணங்கிய பிறகு, அம்மையப்பருக்கு மாலை சாற்றி, அர்ச்சிப்பதுடன், இந்த உத்தால விருட்சத்தினை அன்புடன் வலம் செய்து வணங்கிட, திருமணம் விரைவில் கைகூடுவது கண்கூடு. இந்த அற்புதத் தலத்தில் சக்திவிகடனும் தருமையாதினத்துக்கு உட்பட்ட திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து சுயம்வரபார்வதி ஹோமம் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். தருமையாதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் அருளாசியோடு இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சுயம்வர பார்வதி ஹோமம் இந்த ஹோமத்துக்கான மந்திரங்களை பிரம்மா உருவாக்கியதாகச் சொல்கின்றன ஞானநூல்கள். இந்த மந்திரங்கள், ‘அழகான துணை கிடைக்க வேண்டும்!’ என்கிற பொருளில் அமைந்தவை அல்ல. சுயம்வர பார்வதி ஹோமத்தில் கொண்டால் ஜாதக, பித்ரு, சர்ப்ப, ருது, நவகிரஹ, களஸ்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள். எல்லா வசதிகளும் இருந்தும் ஏனோ காரணத்தால் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும் அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஒருவருக்குத் திருமணம் தடைபடுகிறது என்றால், பெரும்பாலும் ஜோதிட அமைப்பும் பித்ரு தோஷமுமே காரணம் என்பார்கள். இந்த இரண்டு வகை தோஷங்களையும் நீக்கி அருள் செய்யும் வரமாக நடக்க இருக்கிறது இந்தச் சுயம்வர பார்வதி ஹோமம். இப்படிப்பட்ட அற்புதமான இந்த ஹோம வழிபாடு அருள்மிகு உக்த வேதீஸ்வரர் திருக்கோயிலில் 13.9.26 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற இருக்கிறது. இதில் வாசகர்கள் கலந்துகொண்டு சங்கல்பம் செய்து வழிபடலாம். இதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டது. மேலும் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் பதிவு செய்துகொண்டால்போதுமானது (இதுகுறித்து வேறு எந்தத் தகவலும் அனுப்பப்படமாட்டாது. பதிவு ஒன்றே போதுமானது.) நீங்கள் நேரடியாக கோயிலில் வந்தும் சங்கல்பம் செய்துகொள்ளலாம். இந்த நிகழ்வை லலிதா ஜுவல்லர்ஸ், ரூபிஅபெக்ஸ் மற்றும் தமிழ் மேட்ரிமோனி இணைந்து வழங்குகிறார்கள். ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும் விழுப்புரம் மாவட்டம் தீவனூர் லிங்க வடிவ விநாயகர் - காரியவெற்றியைக் காட்டி அருளும் நவகிரக சந்நிதி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/spiritual/temples/swayamvara-parvathi-homam-at-kuttalam-sriukthavedeswarar-temple




