மும்பை, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவரது பங்களா வீடு மராட்டிய மாநிலம் மும்பை பாந்திராவில் உள்ளது. இந்த பங்களா வீட்டில் ஷாருக்கான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதேவேளை, இந்த பங்களா வீட்டில் தோட்டமும் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மரங்கள், பூஞ்செடிகள் உள்ளன. ஷாருக்கான் வீட்டு தோட்டத்தில் பாம்பு இந்நிலையில், ஷாருக்கான் வீட்டு தோட்டத்தில் 2 பாம்புகள் சுற்றித்திரிந்துள்ளன. இது குறித்து தோட்ட ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பாம்புகளை பிடிப்பதற்காக வனத்துறையினர் வந்துள்ளனர். தோட்டத்தை முழுவதும் ஆய்வு செய்த அதிகாரிகள் 8 அடி நீளம் கொண்ட விஷம் அற்ற பாம்பு ஒன்றை பிடித்தனர். ஆனால், மற்றொரு பாம்பை கண்டுபிடிக்க முடியாததால் அதிகாரிகள் பிடிபட்ட ஒருபாம்பை கொண்டு சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/snake-caught-in-actor-shah-rukh-khans-garden




