சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். Zaheer Khan கடந்த 18 வருடங்களாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெம்மிங் அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஸ்டீபன் பிளெம்மிங் தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோது, சிஎஸ்கே அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றது. இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கானை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறது. Left Arm “Taking” Over! Welcoming Zaheer Khan as the Head Coach of Chennai Super Kings!#WhistlePodu — Chennai Super Kings (@ChennaiIPL) September 21, 2026 ஜாகீர் கானுக்கு இதற்கு முன், ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளது. தொடர்ந்து மூன்று சீசன்களாக சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறிய நிலையில், வரவிருக்கும் 2027 ஐபிஎல் சீசனில் ஜாகீர் கானின் வருகை அணிக்குப் புதிய புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. CSK: 18 ஆண்டுகாலப் பயணம்; 5 முறை கோப்பை வென்ற பயிற்சியாளர் - சிஎஸ்கேவில் இருந்து விலகிய ஃப்ளெமிங் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://sports.vikatan.com/cricket/csk-appoints-zaheer-khan-head-coach-stephen-fleming-exit




