பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏராளமான நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஓட்டல்கள், விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளில் கெட்டுப்போன இறைச்சி, காய்கறிகள், உணவுப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் இதையடுத்து, பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவுத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 132 கிலோ கெட்டுப்போன இறைச்சி, மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட 15 லிட்டர் சமையல் எண்ணெய், கெட்டுப்போன பால், காய்கறிகள் ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து கெட்டுப்போன இறைச்சி, காய்கறிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/bengaluru-132-kg-rotten-meat-seized-from-popular-hotels




