சென்னை, 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். கறவை மாடுகளுக்கான இதர இடுபொருட்களின் விலை உயர்வால், பால் கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி, ரூ.44 ஆக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலை ரூ.38-ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் 3.15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs3-per-litre-cm-vijay




