மும்பை, நடிகை கியாரா அத்வானியை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக சம்பளம் வாங்கும் நடிகை பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. மாடலிங் மற்றும் ஆசிரியர் பணியில் இருந்த இவர், 2014-ம் ஆண்டு வெளியான ‘ஃபக்லி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’, ‘கபீர் சிங்’, ‘குட் நியூஸ்’, ‘ஷேர்ஷா’, ‘பூல் புலையா 2’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். குறிப்பாக, மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வரும் கியாரா அத்வானி, பாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் திகழ்கிறார். திருமணத்துக்கு பிறகும் பிசியாக நடிக்கும் கியாரா இவர், திருமணத்துக்கு பிறகும் பிசியாகப் படங்கள் நடித்து வருகிறார். தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். தற்போது கீது மோகன்தாஸ் இயக்கும் 'டாக்ஸிக்' படத்தில் யாஷ் ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். தமிழில் நடிக்க பேச்சுவார்த்தை இதற்கிடையில் தமிழில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி முன்னணி நடிகர் ஒருவர் அவரை சந்தித்து கதை சொல்லியிருக்கிறாராம். நடிகை தரப்பில் சாதகமான பதிலே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்துள்ளது. கியாரா அத்வானி தெலுங்கில் படங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/after-bollywood-kollywood-a-new-opportunity-for-kiara-advani




