ஈரோடு, அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மங்களூருவில் இருந்து ஈரோடு வழியாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த ரெயில்களின் சேவைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்களூரு சென்ட்ரல் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06126) இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 26-ந்தேதி வரை திங்கட்கிழமைகளில் மாலை 4 மணிக்கு மங்களூரு சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரெயில் திங்கட்கிழமை நள்ளிரவு 12.18 மணிக்கு போத்தனூருக்கும், 1.28 மணிக்கு திருப்பூருக்கும், 2.10 மணிக்கு ஈரோட்டுக் கும் வருகிறது. பின்னர் இங்கிருந்து சேலத்துக்கு 3.17 மணிக்கும். ஜோலார்பேட்டைக்கு 5.20 மணிக்கும் செல்கிறது. இதேபோல் சென்னை எழும்பூர் -மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06125) நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் மாதம் 27-ந்தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை சென்றடையும். இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை மாலை 6.05 மணிக்கு ஜோலார்பேட்டைக்கும், இரவு 7.37 மணிக்கு சேலத்துக்கும், 8.35 மணிக்கு ஈரோட்டுக்கும் வருகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு திருப்பூ ருக்கு 9.28 மணிக்கும். போத்தனூருக்கு 10.43 மணிக்கும் செல்கிறது. மேற்கண்ட தகவல் சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-service-of-special-trains-running-via-erode




