புதுக்கோட்டை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேலும் வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. மீன் பிடிக்க செல்ல தடை இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்க மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/pudukkottai-ban-on-fishermen-going-to-sea-for-fishing




