சென்னை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் அருண்ராஜ் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் ரோட்டரி சங்கத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கி வைத்தோம். ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் திறமைகளை கண்டறிந்து, ஊக்கமும் பயிற்சியும் அவர்களுக்கு அளித்தால் அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை இந்த நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தின. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக Cerebral Palsy எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாய், மனம் தளராமல் தன் குழந்தைக்கு பயிற்சி கொடுத்து வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற வைத்து உதவி மேலாளராக ஆக்கியுள்ளார். அந்த தாயாரின் விடா முயற்சியையும், அந்தக் குழந்தையின் சாதனையையும் பாராட்டி கேடயம் வழங்கினோம். சிறப்பு குழந்தைகளுக்கு இது போன்ற விளையாட்டுப் போட்டிகளை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தினால் இன்னும் பல சிறப்பு குழந்தைகள் பயன்பெறுவார்கள். இதற்கான முன்னெடுப்புகளை நமது மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அரசு உறுதியாக மேற்கொள்ளும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/sports-competitions-for-special-needs-children-in-all-districts-minister-arunraj-announces




