புதுடெல்லி, பாஜகவின் தேசிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தேசியத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் நிதின் நவீன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு, அவரது தலைமையின் கீழ் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பாஜகவின் தேசிய துணைத் தலைவர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான பட்டியலை நிதின் நவீன் வெளியிட்டுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா, உத்தரகண்டைச் சேர்ந்த தீரத் சிங் ராவத், டெல்லியைச் சேர்ந்த ராம் மாதவ் உள்பட 11 பேர் துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். க பி.எல். சந்தோஷும், பொருளாளராக பியூஷ் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தேசிய பொதுச் செயலர்களாக 8 பேரும், தேசிய செயலர்களாக 16 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் தேசிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/bjp-reshuffles-65-executives-tamil-nadus-venkatesan-appointed-as-partys-national-secretary




